×

சமூக முன்னேற்றம், தொழில்வளர்ச்சி என அனைத்திலும் முதலிடத்தில் முத்திரை பதிக்கும் தமிழ்நாடு

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டும் அடைந்தன. மற்ற சில மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் என சமூக குறியீடுகளில் மட்டும் முன்னேற்றம் அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி என அனைத்து தளங்களிலும் பெரும் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு தன் முத்திரையை பதித்துள்ளது. உதாரணமாக கூறவேண்டுமென்றால்:

* ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதலிடம்

* மின்னணு பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் நாட்டில் முதலிடம்

* புத்தொழில் சூழல் அமைவுக்கான தரவரிசையில் முன்னணி மாநிலம்.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிரின் பங்கேற்பு நாட்டிலேயே முதலிடம்.

* உயர் கல்வி சேர்க்கையில் நாட்டில் முதலிடம்.

* தேசிய தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த 146 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று நாட்டிலேயே முதலிடம்.

The post சமூக முன்னேற்றம், தொழில்வளர்ச்சி என அனைத்திலும் முதலிடத்தில் முத்திரை பதிக்கும் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Legislative Assembly ,Finance Minister ,Thangam Thanarasu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம்...